தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா..! மனைவி, மகளுக்கும் பாதிப்பு
18 August 2020, 9:41 pmQuick Share
சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசின் முக்கிய பிரமுகர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இன்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந் நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மட்டுமல்லாது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் மூவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.