ஓ.பி.எஸ்., இ.பிஎஸுடன் அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பு : நாளை வெளியாகிறது முதலமைச்சர் வேட்பாளரின் அறிவிப்பு..!

6 October 2020, 11:52 am
eps ops - updatenews360
Quick Share

சென்னை : நாளை அதிமுக முதலமைச்சர் வேட்பாளரின் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முதலமைச்சர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Admk Executive- Updatenews360

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார், தங்கமணி,ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர்.

அதேவேளையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில், அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். அதிமுகவில் வழிகாட்டு குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 41

0

0