அமைச்சரின் ரூ. 2000 கோடி ஊழல்… மனைவிக்கு விளம்பரம் : அண்ணாமலை வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2023, 2:29 pm
aa - Updatenews360
Quick Share

அமைச்சரின் ரூ. 2000 கோடி ஊழல்… மனைவிக்கு விளம்பரம் : அண்ணாமலை வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை வைத்த அண்ணாமலை, அவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் மீது ஊழல் புகார் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, நேற்றைய மாலை என் மக்கள், என் பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக, கோதண்டராமரும், வைத்தியநாத ஈஸ்வரனும் குடிகொண்டு இருக்கும், அரியலூர் மண்ணில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ ஆரவாரத்துடன் நடந்தேறியது.

அரியலூரில் மட்டும் நெல், கரும்பு மக்காச்சோளம் என ஒரு லட்சம் ஹெக்டேருக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயர் பெற்ற அரியலூர் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலமாக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதால், சிமெண்ட் சிட்டி என அழைக்கப்படுகிறது.

ஆனாலும், தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தபட்ட பகுதிகளில் அரியலூரும் ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்ட மாவட்டவாரியான மனித வளர்ச்சி குறியீட்டில், கடைசி இடத்தில் இருப்பது அரியலூர் மாவட்டம்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார்.
பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும், கருத்தரிப்பு மையத்தின் விளம்பரப் பலகைகளை, அரசுப் பேருந்துகளில் வைத்துக் கொள்கிறார். செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர். வாகன ஆய்வாளர் பதவிகளுக்காக 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது புகார் உள்ளது.

பிரதமர் மோடியின் நல்லாட்சியில், அரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், முத்ரா கடன் உதவி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான நிதி, பிரதமரின் மருத்துவக் காப்பீடு என பல லட்சம் மக்கள் பலனடைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் மது விற்பனைத் துறை தான் இயங்கி வருகிறது. தீபாவளியை ஒட்டிய இரண்டு நாட்களில் மட்டும், தமிழகத்தில் மது காரணமாக ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை மூலம் மட்டும் 20 உயிரிழப்புகள்.

அதைப் பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. பாக்கெட் மது விற்று விற்பனையை எப்படி பெருக்கலாம் என்று மட்டுமே சிந்தித்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 205

0

0