ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. காதலர்கள் போல பழகிய இளைஞர்கள்.. தோண்ட தோண்ட கிடைக்கும் நாட்டு வைத்தியரின் லீலை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 11:01 am
Homosex - Udpatenews360
Quick Share

ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. காதலர்கள் போல பழகிய இளைஞர்கள்.. தோண்ட தோண்ட கிடைக்கும் நாட்டு வைத்தியரின் லீலை!!

கும்பகோணத்தை சேர்ந்தவர் முகமது அனாஸ். சோழபுரம் பகுதியில் இவர் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு இவர் காணாமல் போனார். இது தொடர்பாக போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

ஆனால் இவர் அப்போது கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்த நிலையில்தான் வேறு ஒரு கொலையை விசாரிக்க போய் இவரின் வழக்கில் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. கேசவமூர்த்தி பொதுவாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு, முடி கொட்டுவதற்கான சிகிச்சைகளை வழங்க கூடியவர். முக்கியமாக அவர்களுக்கு பாலியல் தொடர்பான சிகிச்சைகளை வழங்க கூடியவர்.

இவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார் அசோக் என்ற சோழபுரத்தை சேர்ந்த இளைஞர். இவருக்கு ஆண்மைக்குறைவு. இப்படிப்பட்ட நிலையில் அசோக் கடந்த 13ஆம் தேதி மாயமானார். முதலில் இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆண்மை குறைவு காரணமாக இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது

அவர் தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாக கூறி அவர் கடிதம் எழுதி வைத்து இருந்ததும் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இருந்தாலும் போலீசாருக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் தொடர்ந்து நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியிடம் இதை பற்றி போலீசார் தொடர் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கு ஓரினசேர்க்கை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. கொடுமை படுத்திய கேசவமூர்த்தி பல இளைஞர்களை கட்டாயப்படுத்தி அவர் ஓரினசேர்க்கை செய்து கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு இல்லாமல் இளைஞர்களுக்கு மருந்து தருகிறேன் என்ற பெயரில் போதை மருந்தை கலந்து கொடுத்து அதன்பின் அவர்களை ஓரினசேர்க்கை பலாத்காரம் செய்வதும் தெரிய வந்தது.

அப்படித்தான் தன்னிடம் சிகிச்சையாக வந்த அசோக்கிற்கு மருந்து கொடுக்கிறேன் என்று கூறி போதை மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார் நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. இதில் அந்த அசோக் பலியாகிவிட்டது. போலீசாரிடம் அசோக்கை புதைத்த இடத்தை நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி காட்டி உள்ளார் . அசோக்கின் உடலை பாகங்களாக வெட்டி அதில் சிலவற்றை நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி தின்றதாகவும் கூறப்படுகிறது. மீதம் உள்ள பகுதிகளை அவர் தனி தனியாக வீட்டிற்கு பின் பக்கம் புதைத்து உள்ளார். அங்கே சோதனை செய்ததில் 2க்கும் மேற்பட்ட கால் பாகங்கள் கிடைத்துள்ளன.

இதனால் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சோழபுரம் பகுதியில் ஏற்கனவே மாயமான இளைஞர்கள் தொடர்புடைய வழக்குகளை இதையடுத்து போலீசார் தூசி திட்டினர். அவரிடமும் தீவிரமாக வேறு கொலைகளை பற்றி விசாரித்தனர்.

கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் பகுதியில் கொலை வழக்கிற்காக கைது செய்யப்பட்ட நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி ஒன்றிற்கு மேற்பட்ட கொலைகளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலீசார் வாக்குமூலத்தில் தனது கொலையை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

அதன்படி கும்பகோணத்தில் காணாமல் போன இளைஞர் முகமது அனாசை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2021ல் காணாமல் போன வழக்கில் இதனால் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அவர் தன்னிடம் காதலர் போல பழகிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய சென்றதால்.. கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இவருக்குத்தான் மூலிகை போதை பொருளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார். முகமது அணாசுக்கும் ஓரினசேர்க்கை விருப்பம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி ஒன்றாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் முகமதுவிற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஓரினசேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதால் கடைசியாக வீட்டிற்கு வரச்சொல்லி போதை மருந்தை கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டு அதன்பின் அவரின் உடலை வெட்டி சுடு காட்டில் பாதி, வீட்டு பின்புறம் பாதி என்று புதைத்து உள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில் நரமாமிச நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி இந்த கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். விலங்கு வெப் சீரியஸ் போல ஒரு கொலை குறித்த விசாரணையில் அடுத்தடுத்து கொலை நடந்த சம்பவம் தமிழகத்தையே அலற வைத்துள்ளது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 509

    0

    0