உங்க வீட்டுல எத்தனை குழந்தைகள்… இந்தா பிடியுங்க லட்சத்த…. மிசோரம் அரசின் அட்டகாசமான திட்டம்..!!

22 June 2021, 1:29 pm
mizoram - updatenews360
Quick Share

அதிக குழந்தைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக மிசோரம் அரசு அறிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை தடுத்து, மக்கள் தொகையின் பெருக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, முக்கிய அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.

மேலும், அவரது தொகுதியான ஐஸ்வால் பகுதியில் அதிக குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோருக்கு ஊக்கத்தொகையோடு, சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 139

0

0