திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள்…! மு.க. அழகிரி ஓபன் டாக்…! ஸ்டாலின் ஷாக்

12 August 2020, 7:12 pm
alagiri updatenews360
Quick Share

மதுரை: திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள் மு.க. அழகிரி அதிரடியாக கூறி இருக்கிறார்.

திமுகவில் கடந்த சில வாரங்களாக முட்டல், மோதல் என உட்கட்சி விவகாரங்கள் வெடித்து கிளம்ப ஆரம்பித்து இருக்கின்றன. குடும்ப அரசியலால் புழுங்கி போன பலரும், பூனைக்கு எதிராக யார் மணி கட்ட போகிறார்கள் என்று காத்திருந்தனர்.

அதற்கு சரியாக அக்கட்சியின் துணை பொதுசெயலாளராக இருந்த வி.பி. துரைசாமி மணிகட்டிவிட்டு, அப்படியே பாஜகவில் ஐக்கியமாகி திமுகவை அதிர வைத்தார். அதன் பிறகு சிட்டிங் எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லி சென்றார். பாஜக தலைவரை சந்தித்தார். பாஜகவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

தொடரும் இதுபோன்ற அதிருப்தி குரல்கள் திமுகவில் பெரிதாக ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது. உதயநிதியும் தலையீடு, ஸ்டாலினின் கண்டு கொள்ளாத, அலட்சியப்படுத்தும் தன்மை ஆகியவையே காரணம் என்று வலுவாக கூறப்படுகிறது.

MLA kk selvam -- updatenews360

இப்படி திமுகவுக்குள் ஒரு பக்கம் குழப்பம் நிகழ்ந்து கொண்டிருக்க, அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் திமுகவில் இருந்து மேலும் பல மூத்த நிர்வாகிகள் அங்கிருந்து விலகுவார்கள் என்று அதிரடி காட்டியிருக்கிறார் அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள். அக்கட்சியில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சீனியர்கள் பலர் மனம் வெதும்பி போய் உள்ளனர். அவர்களின் விரக்திக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிந்த பின்னர் திமுக மிக பெரிவை சந்திக்கும் என்று கூறி இருக்கிறார்.

அவரின் இந்த பேட்டி திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அண்மைக்காலமாக வாய் திறவாமல் இருந்த அழகிரி, மவுனம் உடைத்து இருக்கிறார் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. இதுநாள் வரை நடப்பதை மவுனமாக பார்த்த அவர் இப்போது வாய் திறந்து இருக்கிறார் என்றால், கட்சியின் உள் வட்டத்தில் நடந்து வரும் அனைத்து சங்கதிகளையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்.

கட்சியில் எப்போது எல்லாம் இதுமாதிரியான சம்பவங்கள் துளிர்க்க ஆரம்பிக்கும் போது உள்ளதை ஒளிக்காமல் சொல்வார், இப்போதும் அதை தான் செய்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஸ்டாலின் தரப்போ இதை பற்றி கண்டு கொண்டதாக தெரியவில்லை.

Stalin-06-updatenews360

ஆனால், அரசியல் அறிந்தவர்களின் கருத்து இதில் வேறாக இருக்கிறது. கட்சிக்குள் எப்போது குழப்பம் நேரும், அப்போது தம்மை சுற்றி அரசியல் நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்பதை அழகிரி விரும்புவார். அப்படித்தான் இப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும். விரைவில் இதற்கான பதிலடி திமுகவின் 2ம கட்ட தலைவர்களிடம் இருந்து வெளிப்படும் என்கின்றனர்.

Views: - 46

0

0