தமிழகத்தின் ஓவைசியாக உருவாகிறாரா அழகிரி..!! தனிக்கட்சி தொடக்கம்.. பின்னணியில் பாஜக..?

16 November 2020, 8:03 pm
MK Alagiri- Updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தற்போது அனைத்து அரசியல் தலைவர்களிடத்திலும் பேசு பொருளாக மாறியிருக்கிறார் முக அழகிரி.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரையில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. ஒரே சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதிகள் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியினால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக தகவல் கசிந்து வருகின்றன. இதனால், திமுக நிர்வாகிகள் செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் களத்தில் களமிறங்குவேன் எனக் கூறி தனது அரசியல் என்ட்ரி தொடர்பான மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

alagiri updatenews360

திமுக உட்கட்சி பூசலை கடுமையான விமர்சனம் செய்த அழகிரி, தனிக்கட்சி தொடங்குவது குறித்து விரைவில் ஆலோசிப்போம் எனக் கூறி, தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதனிடையே, திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தொடங்கப்படும் தனிக்கட்சி தொடர்பாக வரும் 20ம் தேதி அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார்.

ஏற்கனவே பாஜகவில் அவர் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், வரும் 21ம் தேதி அமித்ஷா தமிழக வருவதற்கு முன்பாக அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவது பெரும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

stalin -alagiri - updatenews360

அழகிரியை சந்தித்து பேசிய பாஜகவினர், அழகிரியை தங்களுடன் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுக்காமல், புதிய கட்சியை தொடங்குமாறு அவரை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முக ஸ்டாலினுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பீகாரில் ஓவைசியை போல தமிழகத்தில் அழகிரியை முன்னிறுத்தவே பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிக்கட்சி ஆரம்பித்து வேட்பாளர்களை முன்னிறுத்தும் போது, திமுகவின் வாக்குகளை அழகிரியால் பிரிக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. இதற்காக, அவரை பாஜகவினர் கிளப்பி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அழகிரி என்ன செய்கிறார் என்பதை 20ம் தேதிக்கு மேலே தெரிய வரும்.

Views: - 22

0

0