தனிக்கட்சி தொடங்கும் முக அழகிரி… 20ம் தேதி ஆலோசனை : கனவு தகர்ந்து விடுமோ.. பீதியில் முக ஸ்டாலின்..!!

16 November 2020, 1:06 pm
stalin -alagiri - updatenews360
Quick Share

தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்து முக அழகிரி வரும் 20ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியான தகவல் முக ஸ்டாலின் மற்றும் திமுகவினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரையில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. ஒரே சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதிகள் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியினால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக தகவல் கசிந்து வருகின்றன. இதனால், திமுக நிர்வாகிகள் செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் களத்தில் களமிறங்குவேன் எனக் கூறி தனது அரசியல் என்ட்ரி தொடர்பான மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரஜினியின் கட்சியில் இணைகிறார், பாஜகவில் இணைகிறார் என அடுத்தடுத்து பல்வேறு செய்திகள் முக அழகிரி பற்றி வெளியாகி வந்தன. ஆனால், இவை அனைத்தையும் அவர் நிராகரித்தார். இருப்பினும், ரஜினியும், அழகிரியும் கூட்டணி வைக்கப் போவதாகவும், அழகிரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற தகவலும் வெளியாகி வந்தன. ஆனால், இது தொடர்பான தகவலுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்தே வந்தார் முக அழகிரி.

இந்த நிலையில், திமுக உட்கட்சி பூசலை கடுமையான விமர்சனம் செய்த அழகிரி, தனிக்கட்சி தொடங்குவது குறித்து விரைவில் ஆலோசிப்போம் எனக் கூறி, தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதனிடையே, திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தொடங்கப்படும் தனிக்கட்சி தொடர்பாக வரும் 20ம் தேதி அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார்.

alagiri updatenews360

இவரது அரசியல் கட்சியின் உபயத்தினால் வேறு எந்தக் கட்சிக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறதோ, இல்லையோ, திமுகவிற்கு பெரும் சிக்கலை உருவாக்கும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட திமுக வாக்குகளை அவர் பிரித்தெடுப்பார். ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளினால் ராஜிவ் காந்தி கொலை வழக்கு, ஈழத் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களினால், பிரச்சார மேடைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில், புதிய கட்சியை தொடங்கும் அழகிரி, வெற்றி பெறா விட்டாலும், திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தனது பக்கம் இழுக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். தேர்தல் நேரத்தில் அழகிரியின் புதிய கட்சி, ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Views: - 17

0

0

1 thought on “தனிக்கட்சி தொடங்கும் முக அழகிரி… 20ம் தேதி ஆலோசனை : கனவு தகர்ந்து விடுமோ.. பீதியில் முக ஸ்டாலின்..!!

Comments are closed.