‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ : தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் முக ஸ்டாலின்!!

7 May 2021, 9:31 am
stalin oath - updatenewsw360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன், பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். அப்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறி, அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

Views: - 175

0

0