வீட்டு வேலை செய்ய வந்தவர் வீட்டுக்கே முதலாளியாக நினைக்கக்கூடாது : சசிகலாவை டார்டாராக கிழித்த சிவி சண்முகம்..!!

6 July 2021, 12:34 pm
sasikala - cv shanmugam - updatenews360
Quick Share

விழுப்புரம் : அண்மை காலமாக அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்து வரும் சசிகலாவை, எம்எல்ஏ சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வெற்றி பெறச் செய்யத் தேவையான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளும், அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது :- அனைவரும் ஒற்றுமையாக இருந்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும். 1972ம் ஆண்டு அதிமுக தொடங்கிய போது, 1973ல் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் சசிகலா. ஆனால், அவர் எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகிறார். இது எம்ஜிஆரின் புகழுக்கு களங்கள் விளைவிக்கும் செயல். இதனை எம்ஜிஆர் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.

நீங்கள் யார் என்ன செய்தீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்களும் பேசுவோம். எம்ஜிஆருக்கு ஒரே சொந்தம் இரட்டை இலையும், அதிமுக தொண்டர்கள் தான். வீட்டு வேலை செய்யவந்தவர் வீட்டுக்கே முதலாலியாக நினைக்கக்கூடாது, எனக் கூறினார்.

Views: - 167

0

0