கருணாநிதியை மோடி பார்க்கலையா..? நான் பார்த்ததுதான் தப்பா..? திமுகவை குடையும் கு.க. செல்வம்…!

8 August 2020, 6:54 pm
MLA kk selvam -- updatenews360
Quick Share

சென்னை: மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை என்று அதிருப்தி எம்எல்ஏ கு.க. செல்வம் கூறி உள்ளார்.

திமுகவுக்கு இப்போது போதாத காலம் என்றே சொல்லிவிடலாம். கொரோனாவுக்கு அக்கட்சியின் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் பலியானார். உதயநிதி ஸ்டாலின் தலையீடு, விபி துரைசாமி என்று ஒரு பக்கம் இடியாய், இடிக்கிறது பல விஷயங்கள்.

மற்றொரு பக்கம் துரைமுருகன் நான் எங்கேயும் போகவில்லை, எனக்கு அதிருப்தியும் இல்லை என்று அறிக்கை விடுகிறார். ஆனால் கு.க.செல்வம் எம்எல்ஏவோ சென்னையில் இருந்து டெல்லிக்கு பிளைட் பிடித்து பாஜக தேசிய தலைவரையே பார்த்துவிட்டு வந்து விட்டார்.

இப்படி அனைத்து நெருக்கடிகளுக்கும் திமுக பாடாதபாடு படுகிறது… காரணம் எல்லாம் குடும்ப அரசியல். பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் கு. க. செல்வத்தை திமுக தலைமை சஸ்பென்ட் செய்தது. திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கு.க. செல்வம் பதில் அளித்துள்ளார்.அவரது தமது பதில் கடிதத்தில் கூறி உள்ளதாவது:

MLA kk selvam -- updatenews360

கட்சியின் மாண்பை நான் மீறவே இல்லை. மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்று திமுக கட்சி விதிகளில் இல்லை. கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தார். இது அனைவருக்கும் தெரியும்.

ஆகையால் கட்சியின் மாண்பை நான் மீறிவிட்டேன் என்பது சரி கிடையாது. இயற்கை நீதிக்கு விரோதமானது. எனவே குற்றச்சாட்டு நோட்டீஸை   திமுக திரும்ப பெற வேண்டும். நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் ஒத்துழைக்க தயார் என்று கூறி உள்ளார்.