திருவாரூர் மாணவியின் கல்விக்கு நான்கு ஆண்டுகளாக உதவி..! பிரதமர் மோடி அசத்தல்..!

4 September 2020, 8:37 pm
Quick Share

திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், வசதியற்ற சிறுமி ஒருவர் கல்வி பயில வசதி செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த உரை சிறுமியின் கல்விக்கு உதவி வரும் ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாணவி ரக்‌ஷிதா :

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பவித்திரமாணிக்கம் கிராமத்தில் உள்ள திரு.வி.க.நகரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகள் தான் ரக்‌ஷிதா. 
இவர் கடந்த 2016’ம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கல்வி பயில ஆசைப்பட்டு விண்ணப்பித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி உதவி :

ஆசை ஆசையாக ரக்‌ஷிதா விண்ணப்பித்தாலும், கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதனையடுத்து, மாணவி ரக்‌ஷிதா தனது தந்தை குணசேகரனுடன் இணைந்து, பள்ளியில் சேர்க்க உதவி கேட்டு மோடிக்கு கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்தைக் கண்ட மோடி, உடனடியாக தலையிட்டு, ரக்‌ஷிதாவுக்கு பள்ளியில் இடம் ஒதுக்க கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதன் மூலம் சிறுமி ரக்‌ஷிதாவின் கேந்திரிய வித்யாலயா கனவு நனவானது. ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக, அவரது தந்தை குணசேகரனால் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

இதனால் பள்ளியிலிருந்து சிறுமி வெளியேற்றப்படும் சூழல் உருவானது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீண்டும் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து பிரதமர் மோடி, சிறுமியின் கல்விச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக் கொண்டு தொடர்ந்து நான்கு வருடமாக செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியால் பலனடைந்து வரும் சிறுமி ரக்‌ஷிதா, “நான் பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் என்னைப் போல் வசதியற்ற சூழலில் வாழும் குழந்தைகளின் கல்விக்கும் பிரதமர் உதவி புரிய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தங்கள் மாவட்ட சிறுமியின் கல்விக்கு மோடியே நேரடியாக உதவி புரியும மோடியின் செயலை அறிந்த திருவாரூர்வாசிகள், தைரியமாக கடிதம் எழுதிய சிறுமிக்கும், சிறுமியின் கடித்திற்கு மதிப்பளித்து உதவிய பிரதமரின் நடவடிக்கைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0