கொரோனா தடுப்பூசி எந்த கட்டத்தில் இருக்கிறது..? உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

28 November 2020, 11:16 am
modi inspection - updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலானது சில மாநிலங்களில் 2வது அலையை வீசி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக சராசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. இருப்பினும், சில வடமாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்துவற்கு, தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்து உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனங்கள் மனிதர்களுக்கு 2 மற்றும் 3 கட்டங்களாக மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்துள்ளன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி, முதலில் குஜராத்தில் உள்ள சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு சென்றார். அங்கு அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நிலவரம் மற்றும் தன்மை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர், தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

Views: - 37

0

0

1 thought on “கொரோனா தடுப்பூசி எந்த கட்டத்தில் இருக்கிறது..? உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

Comments are closed.