பெரியார் – பிரதமர் மோடி பிறந்த நாள்…. டுவிட்டரில் வலுக்கும் ஹேஷ்டேக் யுத்தம்…!! அதுக்குனு இப்படியெல்லாமா..?

Author: Babu Lakshmanan
17 September 2021, 11:41 am
modi - periyar - updatenesws360
Quick Share

மறைந்த தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சியினர் பெரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவுப்படுத்தி கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

இவை அனைத்திற்கு மேலாக பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து தமிழக அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

periyar memorial day - updatenews360

பெரியாரின் பிறந்த நாளையொட்டி சமூகவலைதளங்களில் முழுக்க முழுக்க அவரைப் பற்றிய கருத்துக்களே வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், ‘பெரியார்’ என்னும் ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்திய அளவில் டிரெண்டான இந்த ஹேஷ்டேக்கின் மூலம், நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

modi - updatenews360

இது ஒருபுறம் இருக்க, திராவிடக் கொள்கைக்கு எதிர் கொள்கையைக் கொண்ட பாஜகவினரால், பிரதமர் மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர் எதிர் சித்தாந்தத்தைக் கொண்ட இரு தலைவர்களின் பிறந்த நாள் ஒரே தினத்தில் கொண்டாடப்படுவதால், டுவிட்டரில் ரனகளம் உண்டாகியுள்ளது.

யார் சிறந்தவர்கள் என்பது போன்ற கருத்துக்களை இருதரப்பினரும் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். அதிலும், உச்சகட்டமாக, ‘பெரியாராவது மயிராவது’ என்னும் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரியாரிஸ்டுகளால் பெரியார் ஹேஷ்டேக்கும், பெரியார் எதிர்ப்பிஸ்டுகளால் பெரியாராவது மயிராவது ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருவதால், டுவிட்டர் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் செப்.,17ம் வந்தாலே இந்த டுவிட்டர் மோதல் வாடிக்கையாகிவிட்டது.

Views: - 297

0

0