போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் : பிரதமர் மோடி தமிழில் டுவிட்..!!

15 January 2021, 9:20 am
Modi_NYPF_UpdateNews360
Quick Share

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0