ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்வது ஆபாசம்… அழிவை நோக்கி திமுக : கிழத்தெடுத்த சவுக்கு சங்கர்

Author: Babu Lakshmanan
1 December 2021, 7:26 pm
Quick Share

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்வதை விட உதயநிதியை புகழ்வது மிகவும் ஆபாசமானது என்று பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த போது காணப்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டது. ஆனால், தற்போது பெய்து வரும் கனமழையை சமாளிப்பதிலும், பாதிப்புகளை கையாளுவதிலும் தோல்வியை சந்தித்து விட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, இந்து கோயில்களை குறிவைத்தே அரசு செயல்படுவதாக திமுக மீது எதிர்கட்சியினர் காரசாரமான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற திமுக எம்பிக்களில் ஒருவரான ராஜேஷ்குமார் செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பதவியேற்பு உறுதிமொழிக்கு பிறகு, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று அவர் எழுப்பிய முழக்கம் திமுகவை கொத்தடிமை இயக்கமாக மாறியிருப்பதை உறுதி செய்வதாக எதிர்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :- மாநிலங்களவை வரை சென்று உதயநிதியை புகழ்ந்து பாடுவது திமுகவின்‌ வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்பதை காட்டுகிறது. சுயமரியாதை இயக்கமாக தன்னை வளர்த்துக்‌ கொண்ட திமுகவில் உதயநிதியை புகழ்ந்து பாடுவதும்‌, மாநிலங்களவையில்‌ உதயநித வெல்க என்று ஒரு எம்பி முழக்கமிடுவதையும்‌ பார்க்கும்போது திமுகவின்‌ வீழ்ச்சி ஆரம்பித்து விட்டதையே காட்டுகிறது. அப்போதே அந்த எம்பியை வெங்காய நாயுடு அவர்கள்‌ கடுமையாக விமர்சித்திருக்கிறார்‌. இது இமுகவுக்கு தேவையற்ற தலைகுனிவு. எம்பி பதவி பெற்றுள்ள ராஜேஷ்குமார்‌ யார்‌ என்று பலருக்கும்‌ தெரியாது. ஆனால்‌ அவருக்கு எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பதவியின்‌ ஆயுள்‌ காலம்‌ ஒரு வருடம்‌ தான்‌. அதை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு கூட கொடுத்திருக்கலாம்‌. ஆனால்‌ முகம்‌ தெரியாத ராஜேஷ்குமாருக்கு அந்த பதிவி இடைத்தது எப்படி? இது ஒருபுறம்‌ இருந்தாலும்‌.

stalin-udhayanidhi-updatenews360

கட்‌சியில்‌ உதயநிதியின்‌ வளர்ச்சி என்பதே இயற்கையானதாக இருக்க வேண்டும்‌. ஸ்டாலின்‌ மீது ஏன்‌ யாரும்‌ வாரிசு அரசியல்‌ என்ற முத்திரை குத்த தயங்குகின்றனர்‌ என்றால்‌, கிட்டதட்ட 40 ஆண்டுகாலம்‌ அவர்‌ கட்‌சிக்காக உழைத்து, அதன்‌ மூலம்‌ படிப்படியாக வளர்ந்திருக்கிறார்‌. எனவே ஸ்டாலின்‌ அவர்களை வாரிசு அரசியல்வாதி என்று யாரும்‌ விமர்சிக்க முடியாது. ஆனால்‌ உதயநிது மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு உடனே எடுபடுகிறது, அதற்கு காரணம்‌ ராஜ்யசபாவில்‌ போய்‌ ராஜேஷ்குமார்‌ போன்ற எம்பிகள்‌ பேசுவதினால்தான்‌. என்னைப்‌ பலரும்‌ கேட்கிறார்கள்‌, ஏன்‌ உதயநிதியை குறிவைத்து விமர்‌க்கிறார்கள்‌ என்று, நான்‌ கேட்கிறேன்‌ உதயறிது கட்‌சிக்காக என்ன பங்காற்றியிருக்கிறார்‌. திமுக என்பதையே தங்களது குடும்ப சொத்தாக ஸ்டாலின்‌ குடும்பத்தார்‌ கருதுகின்றனர்‌. ராஜேஷ்குமார்‌ போன்றவர்கள்‌ உதயநிதியை மாநிலங்களவையில்‌ புகழ்வது பச்சை கொத்தடிமைத்தனம்‌ என்று சொல்லாமல்‌ வேறு என்ன சொல்வது, என தெரிவித்துள்ளார்.

Views: - 406

0

0