இஸ்ரோவிடம் இருந்து நாகர்கோவில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை : அதிரடி காட்டும் பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி..!!

8 May 2021, 12:35 pm
bjp mla mr gandhi - updatenews360
Quick Share

நாகர்கோவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, இஸ்ரோவிடம் இருந்து ஆக்சிஜன் வாங்கி அதிரடி காட்டியுள்ளார் பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்ஆர் காந்தி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தொகுதியில் தொடர்ந்து பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வரும் அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பது எம்எல்ஏ எம்ஆர் காந்திக்கு தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ந்து போன அவர், உடனடியாக, இஸ்ரோ தலைவர் சிவனை தொடர்பு கொண்டு, நாகர்கோவிலுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எம்ஆர் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இஸ்ரோ மகேந்திரகிரி நிறுவனம் உடனடியாக ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படும் என்று உறுதியளித்தது.

இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த இஸ்ரோ நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ எம்ஆர் காந்தி.

Views: - 318

2

0