முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு இன்று ஆய்வு
Author: Babu Lakshmanan17 August 2021, 8:34 am
முல்லைப் பெரியாறு அணையில் மழைக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரம் வரை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்து விட்டது. மேலும், அணையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மழைக்காலங்களில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க 3 பேர் கொண்ட மத்திய குழு மற்றும் 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது.
அதன்படி, சில குறிப்பிட்ட கால இடைவேளைகளில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வை இந்தக் குழு மேற்கொள்ளும். இந்த நிலையில், இன்று மத்திய கண்காணிப்பு துணைக் குழு ஆய்வு நடத்தவுள்ளது.
0
0