கேப்டனை மாற்றியும் பலனில்லை..! டிகாக் அபாரம் : தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!!!

16 October 2020, 10:55 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, மோர்கன் தலைமையில் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சியே காத்திருந்தது. கில் (21) மட்டுமே ஓரளவுக்கு ரன் சேர்க்க, மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து, ஜோடி சேர்ந்த கம்மின்ஸ், கேப்டன் மோர்கன் இணைந்து அணியின் சரிவில் இருந்து மீட்டனர். கம்மின்ஸ் (53), மோர்கன் (39) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு டிகாக், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா 35 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், டிகாக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் ஆட்டமிழக்காமல் 78 ரன்களை எடுத்து, 17 வது ஓவரிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 5 வது வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலேயே நீடிக்கிறது.