மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : குடியிருப்புகளுக்கு பரவியதால் 3,500 பேர் வெளியேற்றம்

23 October 2020, 10:51 am
mumbai fire accident 1 - updatenews360
Quick Share

மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அருகே உள்ள குடியிருப்புகளுக்கும் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,500 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு மும்பையில் செயல்பட்டு வரும் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த வணிக வளாகத்தில் இருந்து 300 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதிகாலை வரை நீடித்த இந்த தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்ட நிலையிலும், மளமளவென எரிந்த தீ, அருகே இருந்த குடியிருப்புகளுக்கும் பரவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3,500 பேர் அப்பகுதியில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Views: - 21

0

0