ஓடும் ரயிலில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் : தடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல் … நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
9 October 2021, 2:15 pm
train rape - updatenews360
Quick Share

மும்பையை நோக்கி சென்ற ரயிலில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. மும்பைக்கு 120 கி.மீ. தொலைவில் உள்ள லகத்புரி புரி நகரின் அருகே ரயில் சென்ற போது, சில கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஏசி பெட்டியில் ஏறியுள்ளனர். அதில் இருந்த பயணிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை ஆயுதங்களை காட்டி மிரட்டி பிடுங்கினர்.

அதோடு, பெண் பயணி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, தடுக்க வந்த பயணிகளையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கசாரா ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Views: - 454

0

0