‘காதலிக்காமல் யாரும் சாகக்கூடாது’! இது சீமானின் காதலர் தின அட்வைஸ்! அந்த விஜயலட்சுமி யாரு..? நெட்டிசன்கள் கலாய்..! (வீடியோ)

14 February 2020, 4:31 pm
seeman - updatenews360
Quick Share

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலிப்பவர்கள் தங்களது துணைக்கு பல்வேறு பொருட்களையும், மலர்களையும் பரிசாக வழங்கி காதலை வெளிப்படுத்துகின்றனர். இதனிடையே, இந்த காதலுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காதலர் தினம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பதிவிட்டு, அதோடு, காதலுக்கு ஆதரவாக சில வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :- காதலில் ஒன்றுமில்லை; ஆனால், காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை; காதலுக்காக யாரும் சாகக் கூடாது; ஆனால் காதலிக்காமல் யாரும் சாகக் கூடாது! ஆதலால் காதல் செய்வீர்..!, எனக் குறிப்பிட்டுள்ளார். சீமானின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 2 தினங்களாக பரவி வருகிறது. இந்த நிலையில், சீமானின் இந்த கருத்தை குறிப்பிட்டு, அந்த விஜயலட்சுமி யாரு என நெட்டிசன்கள் கலாய்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply