வேட்பாளர்கள் அறிவிப்பு: வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டும் நாம் தமிழர் கட்சி…!!

By: Aarthi
14 October 2020, 12:38 pm
3 seemna - updatenews360
Quick Share

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக பல்வேறு அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என அறிவித்து, 117 சட்டமன்ற தொகுதியில் ஆண் வேட்பாளர்களும், 117 சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களும் கட்சி சார்பில் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

seeman 2 - updatenews360

இந்நிலையில், தமிழகத்தில் முதல் அரசியல் கட்சியாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பு பணியை நாம் தமிழர் கட்சி தொடங்கி விட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒப்புதலுடன், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பொறியாளர் ஜவஹர் சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் சிவக்குமார் களஞ்சியம் அறிவிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகர் ஆர்.கே சுரேஷின் சகோதர்தான் சிவக்குமார் களஞ்சியம்.

இதேபோல், அறந்தாங்கி, மானாமதுரை, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல சட்டமன்ற தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேலும், சட்டமன்ற தொகுதியிலுள்ள கிராமங்கள் தோறும் சென்று கட்சிக் கொடிகளை ஏற்றி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் கள பணிகளை தொடங்கிவிட்டது நாம் தமிழர் கட்சி.

Views: - 39

0

0