‘கூட்டணியில் இருப்பதால் வாயை மூடி இருக்க முடியாது’ : 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்.,க்கு திமுக பளார்..!!

7 November 2020, 4:48 pm
stalin-ks-alagiri-updatenews360
Quick Share

சென்னை : 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க கடந்த 2018ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில், 7 பேரை விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2 ஆண்டுகளாகியும் இந்த தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கையின் மூலம், மாநில அரசுக்கான அதிகாரத்தை வெளிக்காட்டினார். இதனால், ஆடிப்போன ஆளுநர் பன்வாரிலால் புரோகித், டெல்லிக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, 7 பேரின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வந்தன.

Stalin_DMK_UpdateNews360

இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது பங்கிற்கு, “சுமார் 30ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு திமுக தந்த அழுத்தம், அதன் விளைவான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் கிடப்பது, உச்சநீதிமன்ற உத்தரவு- ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும், எனக் கூறி ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

டெல்லிப் பயணத்தை முடித்து வந்த ஆளுநர் எப்போது வேண்டுமானாலும், 7 பேரின் விடுதலை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nellai KS Alagiri Byte - updatenews360

இந்த சூழலில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலையை அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், “கொலை குற்றம்‌ செய்தவர்களை குற்றவாளிகள்‌ என்றுதான்‌ கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள்‌ என்று அழைப்பது சரியல்ல. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும்‌ என்று ஒரு இயக்கம்‌ ஆரம்பித்தால்‌ தமிழகத்தில்‌ காவல்‌ நிலையங்கள்‌ வேண்டாம்‌, நீதிமன்றங்கள்‌ வேண்டாம்‌, சட்டம்‌ ஒழுங்கைப்‌ பற்றி பேச வேண்டாம்‌ என்பது பொருளாகும்‌. எனவே, முன்னாள்‌ பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர்‌ பண்பாடு ஆகாது, ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸின் இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மவுனம் காத்து வரும் திமுக, இந்த விவகாரத்திலும் அதே நிலையை கடைபிடித்தால், தேர்தலில் பின்னடைவை சந்திக்கக் கூடும் என்பதை உணர்ந்தது.

mk-Stalin-ks-alagiri - updatenews360

இதனால், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் இந்தக் கருத்திற்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை தெரிந்துதான், 7 பேர் விடுதலையை திமுக வலியுறுத்தியுள்ளதாகவும், கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் கட்சி சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, தொகுதி பங்கீடு, உதயசின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கூட்டணி கட்சிகளிடையே மோதலை சந்தித்து வரும் திமுகவிற்கு, காங்கிரஸின் இந்த நடவடிக்கை பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

Views: - 23

0

0