மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜா.. சிக்கிய RED LIGHT AREA : சிக்கும் முக்கிய பிரமுகர்கள்.. அதிரடியில் இறங்கிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 5:53 pm
Massage Center Red light - Updatenews360
Quick Share

மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்களின் பெயர்கள் அடிப்பட்டுளளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு கும்பல் சிக்கி உள்ளது. இங்கு செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.. கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களையும் மீட்டனர். மசாஜ் சென்டர் ஓனர் அருட்செல்வன், மனைவி நித்யஸ்ரீ மங்கையர்கரசி 38, கஸ்டமர்கள் ஏகலைவன் 42, காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 3 போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், பைக் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர்.

விபச்சாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேனேஜர் பூமதி 36, கஸ்டமர் காமராஜ் 41, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஓனர் சந்தோஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்.

காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.

வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது. இப்போதைக்கு 2 மசாஜ் சென்டர்களின் ஓனர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்..
காரணம், அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் நம்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது..இது தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்கள் போலீஸ். யார் யார் பின்னணியில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 65

0

0