நாங்குநேரி சம்பவம்.. மாணவரிடம் தொலைபேசியில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர்.. படிப்பு தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 11:57 am
CM Nanguneri - Updatenews360
Quick Share

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேரும், இன்று காலை ஒருவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் வீடியோ காலில் நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது

முதலமைச்சர் உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். முதலமைச்சர் மாணவன் சின்னத்துறையின் தாயிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு அனைத்து வகையான உயர்சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது மாணவன் நலமுடன் இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பில் தடை எதுவும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Views: - 228

0

0