தேசிய அளவில் டிரெண்டாகும் #திருட்டுப்பயதிருமாவளவன் : காரணம் இதுதானா..?

2 November 2020, 2:03 pm
thirumavalavan - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், கூட்டணி குறித்து இதுவரையில் எந்தவிதமான உறுதியையும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திமுகவின் கூட்டணியில் இருந்து திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றி விட முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே, திமுக கூட்டணி பற்றி எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளிப்படையாகக் கூறாமல் இருந்து வருகிறார்.

Thirumavalavan - stalin - updatenews360

இதையறிந்த திருமாவளவனும் சிறுபான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதை காட்டுவதற்காக, மனு ஸ்மிருதி நூலில் பெண்கள் விபச்சாரிகள் எனக் கூறப்பட்டிருப்பதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதனிடையே, அண்மையில் தேவர் ஜெயந்தியன்று GoBackStalin என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் செய்யப்பட்டது. இதனை பாஜக உள்ளிட்ட கட்சியினர் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, திமுகவினரால் டிரெண்ட் செய்யப்பட்ட GoBackModi என்னும் ஹேஸ்டேக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விளக்கம் அளித்தார். அதில், “மோடி எதிர்ப்பு என்பது தமிழக மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கி, 4, 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, மோடிக்கு எதிராக உளவியல் கட்டமைக்கப்பட்டது,” எனக் கூறினார்.

திருமாவளவனின் இந்தக் கருத்தினால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், #திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஸ்டேக் இந்தியா அளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மோடிக்கு ஆதரவாக பேசிய திருமாவளவனை எதிர்த்து திமுகவினர் இதனை டிரெண்ட் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் திருமாவளவனை விரைவில் அதிமுக கூட்டணியில் பார்க்கலாம் என நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 22

0

0

1 thought on “தேசிய அளவில் டிரெண்டாகும் #திருட்டுப்பயதிருமாவளவன் : காரணம் இதுதானா..?

Comments are closed.