எடப்பாடியாரின் அரசுக்கு சாதகமான நிவர் புயல் : ‘ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ என புலம்பும் எதிர்கட்சிகள்..!!

26 November 2020, 2:44 pm
eps - rain - updatenews360
Quick Share

சென்னை : மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிவர் புயல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு சாதகமான செயல்களை மறைமுகமாக நிகழ்த்தியிருக்கிறது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தலுக்கான பணிகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு ஒருசேர மேற்கொண்டு வருகிறது. இப்படியிருக்க, இந்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறும் விதமாக, கூட்டணி கட்சியான பாஜக வேல்யாத்திரையும், எதிர்கட்சியான திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் தேர்தல் பிரச்சாரம் ஆகியவை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

விதிகளை மீறி பிரச்சாரம் மற்றும் யாத்திரையை மேற்கொள்பவர்களை போலீசார் நாள்தோறும் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயற்கையின் சீற்றமான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிதீவிரமாக கரையை கடக்கும என அறிவிக்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடுக்கி விட்டார். அதேவேளையில், புயலை காரணம் காட்டி, பாஜக வேல்யாத்திரையை ரத்து செய்தது. திமுகவும் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

CM - Updatenews360

மேலும், கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரி நிறையும், அதனை அரசால் எளிதில் கையாள முடியாது என்றும், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்து விடலாம் என்று எதிர்கட்சிகள் திட்டமிட்டன. ஆனால், இதுவரை தமிழகத்தை தாக்கிய வர்தா, கஜா உள்ளிட்ட புயல்களை போல இல்லாமல், நிவர் புயல் சேதங்களையும் குறைவாகயும், மழையை அதிகளவிலும் கொடுத்து விட்டுச் சென்றுள்ளது. இதனால், தமிழகத்தில் சேதங்கள் ஏதும் இன்றி, ஏரி, குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் இன்று நடைபெறுவதாக இருந்த பொது வேலை நிறுத்தமும், நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வங்காள விரிகுடா பகுதியில்‌ உருவான நிவர்‌ புயல்‌ திசை மாறி வேகம்‌ குறைந்து அதி தீவிர புயலாக மாறி உள்ளது. இதனால்‌ பொது வேலைநிறுத்த நாளான 26ம்‌ தேதி
தமிழகத்தில்‌ வட மாவட்டங்களில்‌ புயலின்‌ தாக்கமும்‌ பெருமழையும்‌ நீடிப்பதால்‌ 13 மாவட்ட மாவட்டங்களில்‌ பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது செயல்திட்டத்தில்‌ சிறிது மாறுதல்‌ செய்ய வேண்டிய அவசியம்‌
எழுந்துள்ளது.

புயலின்‌ தாக்கத்தை விட இந்திய அரசு தொழிலாளர்கள்‌, விவசாயிகள்‌ மீது தொடுக்கும்‌ தாக்குதல்‌ பல மடங்கு அதிகமானது, கொடூரமானது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட 13 மாவட்டங்களில்‌ வேலைநிறுத்தம்‌ சாத்தியமில்லை. ஆனால்‌ இதர மாவட்டங்களில்‌ பொது வேலைநிறுத்தம்‌ நடத்தப்பட வேண்டும்‌. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ நிவாரணப்‌ பணியில்‌ மற்றும்‌ அத்தியாவசிய பணியில்‌ உள்ள தொழிலாளர்கள்‌ பணிக்கு செல்லலாம்‌. அதேபோல வேறு மாவட்டங்களில்‌ இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ நிவாரண பணிக்கு செல்ல வேண்டிய மின்வாரியம்‌ போன்ற துறைகளில்‌ தொழிலாளர்களும்‌ பணிக்கு செல்லலாம்‌. நமது போராட்டம்‌ மத்திய, மாநில அரசுகளின்‌ தொழிலாளர்‌ விரோத விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிரானதே தவிர மக்களுக்கு எதிரானது அல்ல.

Bank strike 01 updatenews360

பாதிப்புக்கு ஆளாகியுள்ள மேற்சொன்ன சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில்‌ தமிழக மக்கள்‌ நிவாரண பணிகளில்‌ தொழிற்சங்க அமைப்புகளும்‌ தொழிலாளர்களும்‌ ஈடுபட வேண்டி இருப்பதால்‌, இந்த நேரத்தில்‌ மறியல்‌ போராட்டம்‌ நடத்துவது பொருத்தமற்றது. எனவே, அதை கைவிடலாம்‌. புயல்‌ பாதிப்புக்கு ஆட்படாத பகுதிகளில்‌ அங்கு மழை பெய்து கொண்டிருந்தாலும்‌ கூட மறியல்‌ போராட்டத்தை நடத்துவது சரியானதாகும்‌. இதில்‌ மாற்றம்‌ தேவைப்படும்‌ எனில்‌ அந்த மாவட்ட தலைவர்களே கலந்து பேசி போராட்ட வடிவத்தை நிர்ணயிக்கலாம்,‌ இவ்வாறு அதில்‌ கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், இயற்கையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Views: - 21

0

0