‘இன்னும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புங்க’ : மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு கடிதம்…!!!

15 April 2021, 7:00 pm
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 7,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகினர். இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. அதில், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 29

0

0