நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

Author: Babu
28 July 2021, 10:44 am
admk protest -updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தலிலும் திமுக மாபெறும் வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வெற்றிக்கு காரணமான கோரிக்கைகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அமைச்சர்கள் மலுப்பலான பதிலையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்‌நாட்டு மக்களின்‌ நலனுக்காகவும்‌, தமிழ்‌ நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சி மேம்படவும்‌ மேற்சொன்ன கோரிக்கைகளை தி.மு.க. அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவரும் முயறசியாகவும், திமுக அரசின்‌ மெத்தனப்போக்கை களையவும்‌, அக்கறையுடன்‌ மக்கள்‌ குரலுக்கு செவி சாய்க்கச்‌ செய்யவும்‌ தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நீட்தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரவர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 201

0

0