நீட் தேர்வு குறித்து தீபாவளிக்கு பிறகு யோசிக்கலாமே..! பிரதமர் மோடிக்கு சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை..!

22 August 2020, 7:48 pm
Swamy_Updatenews360
Quick Share

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்தலாம் என்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் செப்டம்பர் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வும், செப்.,27ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்.,13ம் தேதி நீட் நுழைவுத் தேர்வும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

இதனிடையே, தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், தேர்வை தள்ளி வைக்கவெல்லாம் முடியாது என்று தேர்வு முகமையும் திட்டவட்டமாக கூறி விட்டது.

இதனிடையே, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தீபாவளி பண்டிகைக்கு பிறகு நடத்திக் கொள்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்துடன் பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 0 View

0

0