திட்டமிட்டபடி செப்.,ல் நீட் தேர்வு நடைபெறும் : மத்திய அரசின் அறிவிப்பால் பெற்றோர்கள், மாணவர்கள் அதிருப்தி..!

22 August 2020, 4:59 pm
college_exams_updatenews360
Quick Share

இந்தியாவுக்கு வெளியே நீட் தேர்வை நடத்த முடியாது என்றும், திட்டமிட்டபடி செப்டம்பரில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும், நீட் நுழைவுத் தேர்வு ரத்து இல்லை, திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இதை ஏற்று உச்சநீதிமன்றமும் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

அதேவேளையில், நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கப்பட்டு வந்தன. இதனால், தேர்வு தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்றும், இந்தியாவுக்கு வெளியேவும் தேர்வு மையங்களை அமைக்க முடியாது எனக் கூறியுள்ளது.