நீட் தேர்வு அச்சம்.. தற்கொலை செய்த மாணவன் குடும்பத்திற்கு இபிஎஸ் ஆறுதல்.. ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 9:54 am
admk fund - updatenews360
Quick Share

சேலம் : நீட் தேர்வு அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி திமுக ஆட்சியை பிடித்தது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி, நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது.

இந்தத் தேர்வு அச்சத்தால் இரு மாணவிகள் உள்பட 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவன் நீட் அச்சம் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், மாணவன் தனுஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார்.

Views: - 245

0

0