பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறப்பதால் சினிமாவை தடை செய்ய முடியுமா..? நடிகர் சூர்யாவுடன் மோதும் காயத்ரி ரகுராம்..!

14 September 2020, 12:07 pm
gayatri raguram - surya - updatenews360
Quick Share

சென்னை : நடிகர்களின் திரைப்பட பேனர்கள் விழுந்து ரசிர்கள் உயிரிழப்பதால், சினிமாவை தடை செய்ய முடியுமா..? என நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவிற்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தில் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- ‘நீட்‌ தேர்வு பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்துகொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது.

ஒரே நாளில்‌ ‘நீட்‌ தேர்வு’ மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌
மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கிற ‘நீட்‌ தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌, எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது, பேனர்கள் சரிந்து விழுந்து ரசிகர்கள் உயிரிழக்கும் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து விட்டு, உயிரிழந்து விடுகின்றனர். இதற்கான சினிமாவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்க முடியுமா..? இதில், எந்தவொரு லாஜிக்குமே இல்லை தானே..?

எனவே, தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நோயாளிகளை சந்திக்கும் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும், நாள்தோறும் தேர்வு எழுதுவது போன்றுதான், எனக் கூறியுள்ளார்.

சூர்யாவின் கருத்திற்கு பதிலளித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பதில் அளித்து வருகின்றனர்.

Views: - 8

0

0