மீண்டும் சொல்கிறேன்; தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல! : ஸ்டாலின் அட்வைஸ்..!

12 September 2020, 10:48 am
Stalin 02 updatenews360
Quick Share

சென்னை : தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலை குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தனது மருத்துவ கனவை நிறைவேற்ற முடியுமா..? என்ற அச்சம் பெரும்பாலான தமிழக மாணவர்களிடையே நிலவி வருகிறது.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த அரியலூர் மாணவன் விக்னேஷ் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீட் தேர்வை கண்டு அச்சப்பட வேண்டாம், தற்கொலை தீர்வாகாது என அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வழங்கி வந்தனர்.

இதனிடையே, நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வு பயத்தால் ஒரே வாரத்தில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத சோகத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! ‘எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்துங்க, ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு என்று ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன். நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 14

0

0