நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பா..? நாளை அறிக்கையை தாக்கல் செய்கிறது ஏகே ராஜன் குழு..!!

13 July 2021, 6:20 pm
AK RAjan - Updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

ஏகே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், மக்கள் கருத்து கேட்பு தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், தமிழக அரசு அமைத்த குழுவின் மூலம் நீட் தேர்வினால் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மாணவர் சேர்க்கையை மாற்றி அமைக்க கோரலாம், என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது.

முன்னதாக, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தமிழக அரசிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளது.

Views: - 101

0

0