மக்களே..! இந்த வண்டியை நல்லா பாத்துக்குகோங்க.. பணத்தோடு ஊர், ஊரா வருதாம்..!

27 March 2020, 10:43 am
Cash - updatenews360
Quick Share

நெல்லை: ஊரடங்கினால் வீடுகளில் இருக்கும் மக்களின் வசதிக்காக நடமாடும் ஏடிஎம் வாகனங்களை உலவ விட்டு சிரமத்தை குறைத்து வருகிறது எஸ்பிஐ வங்கி.

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இந் நிலையில், மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், பணமின்றி இருப்பதை தவிர்க்கவும் எஸ்பிஐ சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்து வருகிறது.

நெல்லையில் பொதுமக்கள் பணம் எடுக்க ஏடிஎம் எந்திரத்தை தேடி வருவதை குறைக்க ஒரு வசதியை எஸ்பிஐ செய்திருக்கிறது. சிறப்பு ஏற்பாடாக முக்கிய தெருக்களுக்கு ஏடிஎம் வாகனம் ஒன்று வலம் வருகிறது.

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீடு முன்பும் சில நிமிடங்கள் இந்த ஏடிஎம் எந்திரம் நிற்கிறது. அதை நெல்லை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் ஏடிஎம் வாகனங்களை அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply