நேதாஜி பிறந்த நாள் ‘துணிச்சல் தினம்’ கொண்டாடப்படும் : மத்திய அரசு கவுரவிப்பு

20 January 2021, 9:15 am
nethaji 3- updatenews360
Quick Share

டெல்லி : நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பிறந்த நாளை, துணிச்சல் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை துணிச்சல் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார். மேலும், 23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்க இருப்பதாகவும், நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அவர் கவுரவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Views: - 0

0

0