#அணில்தான்_காரணம் : மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!

23 June 2021, 10:33 am
twitter squirrel - updatenews360
Quick Share

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலை கலாய்த்து, நெட்டிசன்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்தால் மின்வெட்டு மீண்டும் தலைதூக்கும் என சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக பிரச்சாரம் செய்து வந்தது. அதன்படியே, திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் ஏற்படும் மின்தடையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே அரசின் மீது மக்களுக்கு சற்று அதிருப்தி ஏற்பட்டது.

இதனிடையே, ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலராஜி கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று அணில்கள் பற்றிய பேச்சுக்களே பரவலாக இருந்தது. அதேபோல, சமூக வலைதளங்களில் அணில்கள் மையப்படுத்திய காரசார விவாதமும் நடந்து வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலை கலாய்த்து, நெட்டிசன்கள் டுவிட்டரில் #அணில்தான்_காரணம் என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 201

1

0