ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்..! தமிழக இந்து பண்டிகைகளை மட்டும் மதிக்காதது ஏன்..? நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

31 August 2020, 8:34 pm
Stalin-07-updatenews360-6
Quick Share

நாடு முழுவதும் கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் ஓணம் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடாமல் விட்டாலும், வீடுகளில் மலையாள மக்கள் எளிமையாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி முதற்கொண்டு, கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்த ஓணம் வாழ்த்துதான், கழகத்தையே நடுத்தெருவிற்கு இழுத்து விடும் நிலைக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின், ‘கேரள மக்கள் கொண்டாடும் ஒணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதை, என்னவென்று சொல்லுவதென நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

90 சதவீத இந்துக்களை கொண்ட கட்சியாக திமுக உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை ஏன்..? என்றும், ஆனால், கேரள இந்துக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிக்கைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பது என்ன விதமான கொள்கையோ? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுகவில் உள்ள இந்துக்களில் எத்தனை சதவீதம் பேர் ஓணத்தை கொண்டாடுகிறார்கள் என்றும், கந்த கஷ்டி கவசம் போன்ற பிரச்சினை வரும் போது, ஸ்டாலின் மவுனம் காப்பார் என்றும் காட்டாக கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அதேபோல, நரகாசுரன், பொய்யன்’ என்பார். ‘நாங்கள் ராவணின் வாரிசுகள்’ என்பார். ஆனால், வாமனன் வந்தது உண்மை; அதுபோல, மகாபலி இருந்தது உண்மை. இதற்கு பெயர் தான் திராவிட பகுத்தறிவு. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் ஓட்டுக்களை வாங்க உதித்த திடீர் ஓட்டு அறிவு, என திமுகவை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Views: - 9

0

0