இது நமக்கு எதிரான அரசு : ஆவேசம் காட்டிய பா. ரஞ்சித்… அரும்பாக்கத்தில் வசிப்பவர்கள் மக்கள் இல்லையா… விளாசும் நெட்டிசன்கள்..!!

Author: Babu
31 July 2021, 2:33 pm
pa ranjith - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகள் இடித்து தள்ளப்பட்ட நிலையில், முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குரல் கொடுக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அரும்பாக்கத்தில் உள்ள ஆர்கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அரும்பாக்கத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. எந்தவித நோட்டீசும், மாற்று வீடுகளும் தராமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வீடுகளை இடித்து வெளியேற்றப்பட்டதால், பொதுமக்கள் கண்ணீருடன் வீதிகளில் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் உலுக்கியது.

Image

சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ஆனால், பட்டியலின மக்களின் உரிமைக்காகவே கட்சியை நடத்தி வருவதாக கூறி வரும் திருமாவளவன் இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காதது அரும்பாக்கம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அந்த அரசின் நிறைகளை பாராட்டும் திருமாவளவன், குறைகளை சுட்டிக் காட்டாதது ஏன்..? என்றும் கேள்வி எழுந்து வருகிறது.

Thiruma updatenews360

எனவே, இந்த விவகாரத்தில் திருமாவளவன் விமர்சனத்திற்கு உள்ளாவதை தவிர்க்க, தனது கட்சி நிர்வாகியான வன்னியரசு மூலம் பொத்தாம் பொதுவதாக ஒரு டுவிட் போடச் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். வன்னியரசும் திமுக அரசு என்பதை சுட்டிக் காட்டாமல், “கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கிய சேரி மக்களின் ஒப்பாரி ஓலங்கள் இன்னும் தொடர்வது வேதனையிலும் வேதனை. தமிழக அரசே! தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிறுப்புகளை அகற்றுவதை தடுத்து நிறுத்தி, அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, களத்திலும், திரையிலும் பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக அருகம்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆட்சியின் போது சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகளை அகற்றினர். அப்போதைய அரசைக் கண்டித்து கூவம் நதியில் இறங்கி அப்பகுதி மக்கள் போராடினர். போராட்டத்தில் இறங்கிய மக்களை இயக்குநர் பா. ரஞ்சித் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து இருந்தார்.

pa-ranjith-updatenews360

மேலும், சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் @OfficeOfOPS அவர்கள். விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு #நமக்குஎதிரானஅரசு, என தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது திமுக தலைமையிலான அரசு அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வரும் நிலையில், இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவோ, தி.மு.க அரசுக்கு எதிராகவோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 311

0

0