3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது : அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!

16 September 2020, 2:02 pm
sengottaiyan - updatenews360
Quick Share

சென்னை : 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழக அரசின் கொள்கைக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் விரோதமாக இருக்கிறது. 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அந்தக் கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மாநில கல்வி முறைக்கு எதிரானது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் விதமாக இருக்கும், புதிய கல்விக் கொள்கையை அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும், எனக் கூறினார்.

ஸ்டாலினின் பேச்சுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் மீதான அரசின் கருத்துக்கள், கடந்த ஆண்டே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும் என திட்டவட்டமாக சொல்லப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக பரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது. மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில முடிவுகளில் பின்வாங்க மாட்டோம், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0