தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் எங்கெல்லாம் வரப்போகுதுனு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
26 August 2021, 7:21 pm
Ponmudi - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் புதிதாக அமையவுள்ள 10 கலை அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்களை வெளியிட்டார். அதாவது, திருச்சூழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரதம், ஆலங்குடி, சேர்காடு,
தாளவாடி, மானூர் ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கூத்தாநல்லூரில் மகளிர் அரசு கலை கல்லூரி அமைக்கப்பட உள்ளது.

மேலும், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 237

0

0