மத்திய அமைச்சராகும் எல்.முருகன்… ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அமைச்சரவையில் இடம் : பக்காவாக காய்நகர்த்தும் பிரதமர் மோடி!!

7 July 2021, 5:03 pm
cabinet - updatenews360
Quick Share

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் 43 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகல் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவால், அமைச்சர் பதவிகள் காலியாகின. இருப்பினும், அந்தப் பதவிகளை அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பாகவே வகித்து வந்தனர்

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் கங்வார் உள்பட 12 பேர் பதவியை ராஜினாமா செய்ததால், அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் காலியாகின. இதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

cabinet meeting - updatenews360

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிக வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 43 பேரின் பெயர்கள் அடங்கிய புதிய மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக அமைச்சர்களாகும் 43 பேரின் பெயர் பட்டியல்

எல்.முருகன்
நாராயண் தத்து ரானே
சர்பானந்தா சோனாவால்
விரேந்திர குமார்
ஜோதிராதித்ய சிந்தியா
ராமச்சந்திர பிரசாத் சிங்
அஸ்வினி வைஷ்னவ்
பஷு பாட்டி குமார்
கிரண் ரிஜ்ஜு
ராஜ்குமார் சிங்
ஹர்தீப்சிங் பூரி
மன்சூக் மண்டவியா
பர்ஷோத்தம் ரூபாலா
கிஷன் ரெட்டி
அனுராக்சிங் தாகூர்
பன்கஜ் சவுத்ரி
அனுபிரியா சிங் படேல்
சத்யா பால்சிங் பக்தேல்
ராஜீவ் சந்திரசேகர்
ஷோபா கரண்லஜே
பானு பிரதாப் சிங் வர்மா
தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
மீனாட்சி லேகி
அண்பூர்ணா தேவி
நாராயணசாமி
கவுசல் கிஷோர்
அஜய் பட்
பிஎல் வர்மா
அஜர் குமார்
சவுகான் தேவ்சின்
பக்வந்த் ஹுபா
கபில் மோரேஷ்வர் பட்டீல்
பிரதிமா பவ்மிக்
சுபாஷ் சர்கார்
பக்வத் கிஷ்ணாராவ் கரத்
ராஜ்குமார் ரன்ஜன் சிங்
பாரதி பிரவீன் பவார்
பிஷ்வேஷ்வர் டுடு
ஷாந்தனு தாகூர்
முஞ்ஜப்பாரா மகேந்திரபாய்
ஜான் பார்லா
நிதிஷ் பிராமானிக்

Views: - 173

0

0