பிளவுபட்ட தயாரிப்பாளர் சங்கம் : பாரதிராஜா தலைமையில் உருவானது ‘ திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’

3 August 2020, 3:20 pm
rajini-bharathiraja
Quick Share

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உருவாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவி காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படுவதான தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்துவதற்கு எதிராக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் தேர்தல் நடத்தப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவை மற்றும் கொரோனா வைரஸ் பரவல் ஆகிய காரணங்களால் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்திற்கு ‘திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதிராஜ கூறியதாவது :-கொரோனா பாதிப்பினால் நுரையீரல் செயலிழந்து கிடக்கும் சினிமாவிற்கு, திரையிலமே மருந்து கொடுக்க வேண்டிய நேரம் இது. தாய் சங்கத்தை பிரிக்கவெல்லாம் கிடையாது. இன்று முதல் புதிய சங்கத்தின் உறுப்பினர் தேர்வு ஆரம்பமாகியுள்ளது. சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும், எனக் கூறியுள்ளார்.

Views: - 5

0

0