புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்க தமிழக அரசு முடிவு!!
3 August 2020, 4:51 pmசென்னை : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களுடன் மும்மொழி கொள்கையும் இடம்பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன..? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே, மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
‘