ஆப்பை (app) தொடர்ந்து சீனாவுக்கு அடுத்த ஆப்பு…! புதிய கல்விக் கொள்கையில் இருந்து சீன மொழி அதிரடியாக நீக்கம்!!

1 August 2020, 11:32 am
Central Goverment Order-Updatenews360
Quick Share

டெல்லி : இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனையை உருவாக்கி தற்போது பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் சீனாவுக்கு மத்திய அரசு மேலும் ஒரு செக் வைத்துள்ளது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உறவு சீர்குலைந்து விட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்களை சீன ராணுவம் கொன்று குவித்ததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற மத்திய அரசு, அதிரடியாக சீன பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக, அந்நாட்டிற்கு சொந்தமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட ஆப்களுக்கு தடை விதித்தது.

இந்தியாவின் தடையை தொடர்ந்து உலக நாடுகளும் சீன ஆப்களின் பயன்பாடுகளை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய கல்வி கொள்கையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட உள்ளது. தாய் மொழி, தேசிய மொழி மற்றும் இந்திய, அந்நிய மொழிகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் விதமாக விருப்ப மொழி என பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், விருப்ப மொழித்தேர்வு பட்டியலில் இருந்த சீன மொழியை அதிரடியாக மத்திய அரசு நீக்கியுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள பள்ளி பாடங்களில் சீன மொழியான மாண்டரினை இனி பயில முடியாது. கடந்த 2019-ம் ஆண்டின் கல்விக்கொள்கையில் இடம்பிடித்த சீனா, தனது அடாவடித் தனத்தினால், அடுத்த ஆண்டே கல்விக் கொள்கையில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0