புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழு அமைப்பு : தமிழக அரசு..!

8 September 2020, 8:03 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பள்ளிக்கல்வி குறித்து ஆராய்வதற்காக 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை குறித்த வரைவுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் தாய்மொழி கல்வி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சாரம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0