இரவு 10 மணிக்கு மேல் சென்னை ‘கப்-சிப்’ : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல்துறை!!!

30 December 2020, 1:40 pm
new year - updatenews360
Quick Share

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தடை விதித்து காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், தொற்று மேலும் பரவாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களும், சென்னை மெரீனா கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து கடற்கரை சாலைகளும் இரவு 10 மணியுடன் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும்விதமாக, சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் மூடப்படுவதாகவும், மாநகரில் சுமார் 300 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0