மிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..!!

14 April 2021, 5:35 pm
mumbai migrant workers - updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் வேகமெடுத்துள்ளது. இதனால், மாநில வாரியாக பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவில் ஏப்.,30ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு பிழைப்பு தேடிச் சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக, ரயில் நிலையங்களில் காத்திருந்து வருகின்றனர். ஊரடங்கு போட்டால் வேலை மற்றும் வருமானமின்றி மீண்டும் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால், தங்களின் உடைமைகளுடன் போக்குவரத்து வசதியை எதிர்பார்த்துள்ளனத்.

மும்பையில் உள்ள ரயில்நிலையங்களில் வெளிமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

கடந்த ஆண்டே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, வாழ்வாதாரமின்றி தவித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாரை தாரையாக சொந்த ஊர்களுக்கு திரும்பியது நினைவிருக்கலாம்.

Views: - 28

0

0